கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோணாவில் ராஜன் குடியிருப்பைச் சேர்ந்த ப. சத்தியராஜ் (வயது 36) எனும் 2 பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
ஊற்றுப்புளம் குளத்தின் கீழ் உள்ள விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலினுள் இவரது சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பின்னர் இவ்வாறு வாய்க்காலில் போட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.