பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் பிரோஸ்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
பிணை
சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல, சட்டத்தரணி ஹிஜாப் இஸ்புல்லா விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியிருந்தார்.
குறித்த தீர்ப்பை மையப்படுத்தி கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் பிரோஸ்கி பிணை தொடர்பான அறிவிப்பை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.