Vijay - Favicon

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மாற்றமா..! இன்று வெளியான புதிய அறிவிப்பு


நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.



அதன்படி நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்காமல் நியாயமான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்குத் திறன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், அனைத்து இறக்குமதியாளர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், பல்பொருள் அங்காடிகள் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளனர்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மாற்றமா..! இன்று வெளியான புதிய அறிவிப்பு | Essential Food Price In Sri Lanka Today Update

சோளம், உளுந்து, முட்டை போன்ற பொருட்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள், நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் மக்களின் நலனுக்காகவே முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகிறது.



அதேவேளை, தற்போதைய கோதுமை மாவின் விலையை அடுத்த சில மாதங்களுக்கு தக்கவைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *