எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லை. ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சில நாட்களுக்கு முன்பு தன் வசப்படுத்தினார்.
எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதைத் தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
எலான் மஸ்க்
அந்த வகையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், இவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும் அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது.
இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் வேலைக்கு வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்கலாம்.
இராஜினாமா கடிதங்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
ஊழியர் குறைப்பு
சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.