அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
குறித்த தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட 22 இலட்சம் விண்ணப்பங்களில் பெரும்பாலானவர்களின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 340 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதிச் சோதனைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விண்ணப்பதாரர்
இந்த தகவல் கணக்கெடுப்பு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், உரிய தகவல் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரிகளுக்கு சரியான தரவுகளை விரைவில் வழங்குமாறு விண்ணப்பதாரர்களை அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.