Vijay - Favicon

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!


2023 ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் வருகின்ற ஏப்ரல் 5 ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


ஏப்ரல் 16 ம் திகதி வரை பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, 2023 ம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை வழங்கப்படும் எனவும், அக்காலப்பகுதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்! | Education Ministry Said School Students Sri Lanka

டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரையான காலப்பகுதியில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.


இந்தநிலையில், மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை நடைபெறவுள்ளது.


க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக மே 13 தொடக்கம் 24 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.


குறித்த விடயம் தொடர்பான கடிதங்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிரிவேனா அதிபர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *