உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதற்காக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன சுமார் 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க இன்னும் 3 மாதங்கள் உள்ளநிலையில், அதற்கான பணத்தை திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக முன்னாள் அதிபர் மைத்திரி தெரிவித்துள்ளார்.
காலி – பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை போன்ற விடயங்களுக்கு எதிராக நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபா இழப்பீடு வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.