மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (11) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இருந்து யாழ்பணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தினை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் புளியங்குளம் பகுதியில் மாலை 6 மணியளவில் குறித்த பேருந்தை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர்.
அதன்போது சாரதி மதுபோதையில் இருந்ததைஎடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
வைத்திய பரிசோதனை
பேருந்தை புளியங்குளம் காவல் நிலையத்திலும் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.