Vijay - Favicon

சர்வதேச நாணய நிதியம் டொலர்களுக்கான ஒப்புதலை வழங்கும் – நந்தலால் வீரசிங்க


இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது நிலையில் தேவையான விடயங்களுக்கு போதுமான டொலர்கள் கையிருப்பில் இருப்பதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

நாளை 20 ஆம் திகதியன்று இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், 2.9 பில்லியன் டொலர்களுக்கான ஒப்புதலை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

390 மில்லியன் டொலர்கள்

சர்வதேச நாணய நிதியம் டொலர்களுக்கான ஒப்புதலை வழங்கும் - நந்தலால் வீரசிங்க | Doller Rate Slr Today Doler Price Sri Lanka Cbsl


இதனையடுத்து நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமையன்று நாட்டுக்கு முதல் கட்டமாக 390 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் எதிர்வரும் ஜூன் அளவில் நிறைவுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை உள்நாட்டில் கடன் மறுசீரமைப்புக்கும், மறுசீரமைப்புப்பணிகளில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கும் இலங்கையின் வங்கிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *