பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, நேற்று (09) சிறிதளவு வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி இன்று (10) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 371.75 ஆகவும், கொள்முதல் பெறுமதி 360.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை பெறுமதி 425.24 ஆகவும், கொள்முதல் பெறுமதி 408.93 ஆகவும் பதிவாகியுள்ளது.
ரூபாயின் மதிப்பு
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 374. 36 ஆகவும், கொள்முதல் பெறுமதி 359.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன் மூலம், அவுஸ்திரேலிய, கனடா மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.