Vijay - Favicon

தமிழர் பகுதியில் நன்றியுள்ள ஜீவனின் பாசப்போராட்டம்(காணொளி)


மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் தன்னை வளர்த்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக் கிரியைகள் மயானத்தில் நடைபெறும் வரை அவர் வளர்த்த நாய் மயானம் வரை சென்று தனது நன்றிக்கடனை கண்ணீருடன் செலுத்தியது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை எனும் மூதாட்டி அவரது வீட்டில் பல வருடங்களாக நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.

உயிரிழந்த மூதாட்டி

இந்நிலையில், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த மூதாட்டி அவரது மகளின் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று(15.03.2023) உயிரிழந்தார்..இதனை அறிந்து கொண்ட நாய்கண்ணீர் சிந்தியதுடன் மூதாட்டியின் உடல் அருகிலும் நின்றுள்ளது.



இன்று வியாழக்கிழமை மூதாட்டியின் இறுதிக்கிரியைகள் மகளின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிண்ணையடி இந்து மயானத்தில் நடைபெற்றது.

இறுதிக் கிரியையில் பங்கேற்ற நாய்

தமிழர் பகுதியில் நன்றியுள்ள ஜீவனின் பாசப்போராட்டம்(காணொளி) | Dogs Affection Fight In Tamil Area

மூதாட்டியின் இறுதிக் கிரியையில் மக்களோடு மக்களாக நீண்ட தூரம் பயணித்த நாய், பட்டாசு சத்தத்தையும் பொருட்படுத்தாமல் சென்று தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.


நல்லடக்கத்தின் பின்னர் மீண்டும் நாய் மூதாட்டி வசித்த இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *