Vijay - Favicon

அறிமுகமாகும் புதிய எரிபொருள் வரி..! சடுதியாக அதிகரிக்கவுள்ள பெற்ரோல், டீசல் விலை – வெளியாகிய அதிர்ச்சி தகவல்


எரிபொருள்

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.


குறித்த யோசனையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


முன்னதாக எதிர்வரும் ஜனவரி – பெப்ரவரி மாதத்திற்குள் எரிபொருளின் விலை உயரும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருளுக்கு பாரிய வரி

அறிமுகமாகும் புதிய எரிபொருள் வரி..! சடுதியாக அதிகரிக்கவுள்ள பெற்ரோல், டீசல் விலை - வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Diesel Petrol Price January Srilanka Fuel Price

வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருளுக்கு பாரிய வரி விதிக்கப்படவுள்ளதாலேயே அவர் இந்த விடயத்தை முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.



எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் நாட்டில் உள்ள அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.


இதன் காரணமாகவே எரிபொருள் விலையானது விலை சூத்திரத்தின் படி திருத்தம் செய்யப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *