இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை டயனா கமகேவுக்கு கொழும்பு பிரதான நீதவான் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.
டயனா கமகேவுக்கு விசாரணை
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான காரணிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதம நீதவான், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தார்.