நுவரெலியா – நல்லத்தண்ணி பகுதியில் இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் நிலையமொன்றில் வாங்கப்பட்ட தொதல் பொதியொன்றில் இறந்த நிலையில் எலியொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் சிவனொலிபாதமலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையமொன்றில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைத் தந்தவர்கள் தொதல் உள்ளிட்ட இனிப்புக்களை கொள்வனவு செய்துள்ளனர்.
இறந்த நிலையில் எலி
]
இதன்போது வாங்கப்பட்ட தொதலை உண்பதற்காக வெட்டியபோது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.