சாலையில் நடந்து சென்ற யுவதியின் கைத்தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பியோடிய சந்தேகநபரை அருகில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று நுவரெலியா பேரூந்து நிலையத்திற்கு பின்னால் உள்ள உத்யான வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் சென்ற யுவதியின் கைதொலைபேசியை 27 வயதுடைய சந்தேக நபர், கைத்தொலைபேசியை பறித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
அதன்படி, அருகில் இருந்தவர்கள் சந்தேக நபரை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுவரெலியா களுகேலே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் எனவும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.