Vijay - Favicon

தொடர் வெற்றிகளை குவிக்கும் சிறிலங்கா..! இன்றும் வெற்றி


2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்லாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற இன்றைய போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.



நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி

தொடர் வெற்றிகளை குவிக்கும் சிறிலங்கா..! இன்றும் வெற்றி | Cricket World Cup 2022 Today Match

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.


துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் குசல் மென்டிஸ் 68 ஓட்டங்களையும், சரித் 31 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்சன டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனார்.



அதனடிப்படையில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *