Vijay - Favicon

சர்வதேச பிடியாணைக்கு ரஷ்யா பதிலடி..! – ஐபிசி தமிழ்


புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அது ரஷ்யாவில் செல்லுபடியாகாது என ரஷ்யா பதிலளித்துள்ளது.



ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் நாட்டுக் குழந்தைகளை சட்ட விரோதமாக ரஷ்யாவுக்கு நாடுகடத்துவதற்கு காரணமாக இருப்பதால், அவர் போர்க்குற்றங்கள் செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.



ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எந்த முடிவும் ரஷ்யாவில் செல்லுபடியாகாது என கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யா இல்லை

சர்வதேச பிடியாணைக்கு ரஷ்யா பதிலடி..! | Court Issues Warrant For Putin

புடினுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது மூர்க்கத்தனமான நடவடிக்கை என்று கூறியுள்ள ரஷ்யா, அதே நேரத்தில் ரஷ்யாவைப் பொருத்தவரை அது அர்த்தமற்றது என்று கூறியுள்ளது.



ரஷ்யா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் என்னும் ஒப்பந்தத்தின் கீழ் இல்லை. அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கென தனியாக காவல்துறையினர் கிடையாது என்பதால் புடினைக் கைது செய்யமுடியுமா என்பது சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது. 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *