Vijay - Favicon

கொரோனாவால் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள சீனா..!


வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருகிறது என சீனாவின் உள்ளூர் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாக சீனா தெரிவித்து வந்தது.



ஆனால், உண்மையை சீனா மறைக்கிறது என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெரிவித்துவந்தன.

6 கோடிக்கும் அதிகம்

கொரோனாவால் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள சீனா..! | Coronavirus China New Wave Risk Warning



தற்போது உலக அளவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், சீனா கொரோனாவால் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



“வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருகிறது.” என மூத்த சுகாதார ஆலோசகரின் அறிக்கையை மேற்கோள் காட்டிசீனாவின் உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன.



இந்த புதிய கொரோனா அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் என்றும், இந்த வகை தொற்றால் நாட்டில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு

கொரோனாவால் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள சீனா..! | Coronavirus China New Wave Risk Warning



இந்த தகவல் அங்குள்ள மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஓமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாட்டால், கடந்த ஏப்ரல் முதல் சீனாவில் கொரோன தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதிக்கும் வாரந்தோறும் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று சீனாவின் உள்ளூர் ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *