சிங்கள தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முன்னாள் அதிபரும் பொதுஜன ரெமுனவின் தலைவருமமான மகிந்த ராஜபக்சவை இன்றையதினம் அவரது இல்லத்திற்கு தேடிச் சென்று சந்தித்துள்ளார் சீன தூதுவர் கியூ சென்ஹொங்.
இதன்போது பயங்கரவாத எதிர்ப்புப் போர், போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு போன்ற அனைத்து முக்கியமான தருணங்களிலும் இலங்கைக்கு மிகவும் பெறுமதியான உதவிகளை தொடர்ச்சியாக வழங்கியமைக்காக சீன அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் முன்னாள் அதிபர் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் கொவிட்19 தொற்றுநோய்க்கு எதிராக போராடி, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவியமைக்கும் முன்னாள் அதிபர் நன்றி கூறினார்.