Vijay - Favicon

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி


ஆதரவு

புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனையின்றி இலங்கையை ஆதரித்தது என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.



ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மேலும், இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவாக செய்யப்படுவதை சீனா விரும்புகிறது, அதனை அந்த நாடு ஊக்குவிக்கிறது.

சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்வதன் மூலம், இலங்கையும் ஏற்றுமதிகளை கணிசமாக அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

இருதரப்பு அரசியல் உறவு

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி | China Unconditional Support Eliminate Ltte

சீன பொருளாதார ஆராயமுன், இருதரப்பு அரசியல் உறவை பார்க்கவேண்டும்.

பொருளாதார உறவின் ஆழம் மற்றும் வீச்சு விரிவாக்கத்தை இறுதியில் தீர்மானிப்பது அரசியல் உறவேயாகும்.


சீனாவும் இலங்கையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளார்ந்த வளமான நட்பை அனுபவித்து வந்தன.

அண்மைய நெருக்கடியான காலங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்தன.


1952 ஆம் ஆண்டு அரிசி – ரப்பர் உடன்படிக்கை முக்கியமானது.

புலிகளை ஒழிக்க போராடிய இலங்கை

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி | China Unconditional Support Eliminate Ltte

மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் சட்டபூர்வமான இடத்தை பெறுவதற்கு இலங்கை குரல் கொடுத்தது.


ஒரே சீனா கொள்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்.

சீனாவின் தலைவர் மாசேதுங் காலமானதை அடுத்து இலங்கையில் 8 நாட்கள் துக்க தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.


புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனையின்றி இலங்கையை ஆதரித்தது.

இலங்கையின் நம்பகமான நண்பன்

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி | China Unconditional Support Eliminate Ltte

சீனா ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினராக உள்ளதுடன் இலங்கையின் நம்பகமான நண்பராக இருந்துவருகிறது.

சீனா இலங்கையுடன் வசதிக்காகவோ அல்லது தற்காலிகத் தேவையின் அடிப்படையிலோ நட்புகொள்ளவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.


கொவிட் நெருக்கடியின்போது இலங்கைக்கு 26 மில்லியன் தடுப்பூசிகளை சீனா வழங்கியது, அதில் 3 மில்லியன்கள் இலவசமாக கிடைத்தன என குறிப்பிட்டுள்ளார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *