ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கையின் விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சீன மானியத்தின் கீழ் பெறப்படும் 750,000 லீற்றர் டீசல் விவசாய நடவடிக்கைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசெம்பர் மாதத்திற்குள் எரிபொருள் கையிருப்பு இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அறுவடையின் போது அவற்றை விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, அறுவடைக் காலத்தில் எரிபொருளில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் விவசாயிகள் மாவட்ட செயலாளர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.