Vijay - Favicon

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிவப்புக்கோடு – ஜோ பைடன் தெரிவித்த கருத்து.


சீன அதிபர் ஜி ஜின்பிங்ற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜீ 20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இரு நாட்டு அதிபர்களுக்குமிடையில் ஆடம்பர விடுதி ஒன்றிலே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


மேலும், இச்சந்திப்பில் இருவரும் வடகொரியா குறித்தும், உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் குறித்தும் ஆராய்ந்துள்ளதாகவும் உக்ரைனில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அணுவாயுத பரிசோதனை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிவப்புக்கோடு - ஜோ பைடன் தெரிவித்த கருத்து. | China America Joe Baidan Ji Jin Bing Cold War

சீனாவால் வடகொரியாவை கட்டுப்படுத்த முடியும் என நான் உறுதியாக தெரிவிப்பது கடினம் என அமெரிக்க அதிபர் செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், வடகொரியா மற்றுமொரு அணுவாயுத பரிசோதனையில் ஈடுபடுவதை தடுக்கவேண்டிய கடப்பாடு சீனாவிற்குள்ளது என சீன அதிபரிடம்  பைடன் தெரிவித்துள்ளார்.

சீன போர் ஒத்திகை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிவப்புக்கோடு - ஜோ பைடன் தெரிவித்த கருத்து. | China America Joe Baidan Ji Jin Bing Cold War

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கடந்த ஓகஸ்ட் மாதம் தாய்வானிற்கு சென்றதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை அதிகரித்து காணப்பட்டது.


அங்கு பாரிய போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டதை தொடர்ந்து அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் குறித்த அச்சம் ஏற்பட்டது என பைடன் குறிப்பிட்டிருந்தார்.



தாய்வான் தொடர்ந்தும் சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாக காணப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடக்க முடியாத முதல் சிவப்பு கோடு அது என சீன அதிபர் அமெரிக்க அதிபரிடம் தெரிவித்தார்.

“தாய்வான் மீது சீனா தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என சமீப காலங்களில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்” இது உண்மையா? புதிய பனிப்போர் உருவாகின்றதா? என செய்தியாளர்கள் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதற்கு பதிலளித்துள்ள அவர் புதிய பனிப்போரிற்கான தேவையுள்ளதாக நான் உறுதியாக நம்பவில்லை,தாய்வான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் உடனடி நோக்கம் எதுவும் சீனாவிடம் உள்ளதாக நான் கருதவில்லை எனகுறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *