அங்கவீனர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து
வருகிறது.
அங்கவீனர்களுக்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 2500 ரூபாவாக குறைப்பதற்கு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னாரில் இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தற்போது 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சிறிலங்கா அதிபரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க
நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
தனிச் சிங்களச் சட்டம்
1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு
வரப்பட்டு இனவாத கருத்துக்களோடு ஆட்சியாளர்கள் பயணித்ததன் காரணமாக இன்று இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்
தள்ளப்பட்டிருக்கின்றது.
இச்சட்டத்தின் மூலம் சிங்கள மக்கள் அதை எதிர்த்து தடுத்திருந்தால் இன்று சிங்கப்பூர் இலங்கையிடம் கடன் கேட்கின்ற நிலமைக்கு
வளர்ந்திருக்கும்.ஆகவே அடிப்படை பிரச்சனை அங்கிருந்து தான் உருவாகியுள்ளது.
அதிருப்தியான வரவு செலவு திட்டம்
இப்படியான சூழலில் தற்போது இந்த பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அதிபர் வரவு செலவு திட்டம் முன்மொழிந்தது மக்களின்
வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு பொருத்தமாக அமையவில்லை.
இந்த வரவு செலவு திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கு நிதிகள் முன்மொழியப்பட்டு இருந்தாலும் இலங்கையின் அதில் வருமானம் சரியாக
குறிக்கப்படவில்லை.
இதே போன்று பல அதிருப்தியான விடயங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே வரவு செலவு திட்ட ஆதரவு தொடர்பாக கட்சி
தீர்மானிக்கவில்லை”என தெரிவித்திருந்தார்.