நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, மத்திய வங்கி சட்டமூலம் திருத்தத்திற்கு உள்ளாக்கப்படவுள்ளது.
இதன்மூலம், அரசியல் தலையீடுகளின்றி இலங்கை மத்திய வங்கியின் பணிகளை சுயாதீனமாக முன்னெடுக்க முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மத்திய வங்கி, பிரபலமான தீர்மானங்களை அன்றி, சரியான தீர்மானங்களையே எடுக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.