பண மோசடி
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிராடோ ஜீப்பை தருவதாக வாக்குறுதி அளித்து 8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கத்தோலிக்க மதகுரு ஒருவரை கொழும்பு கோட்டை நீதவான் இன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
வண. வர்ணகுலசூரிய லெஸ்லி பெர்னாண்டோ என்ற மதகுரு கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, நவம்பர் 22 ஆம் திகதி வரை அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மதகுருவுக்கு வழங்கப்பட்ட பணம்
முறைப்பாடுஅளித்தவர், தனக்கு பிராடோ ஜீப்பை வழங்க மதகுரு ஒப்புக்கொண்டதால் அவருக்கு ரூ. 8 மில்லியனை கொடுத்ததாக தெரிவித்தார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றில் பல வழக்குகளில் கைதாகி பிணையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு பாதிரியார் பணம் முழுவதையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.