- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை 4.0 மெக்னிடியூட் அளவில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது. புதன்கிழமை காலை 10.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பீகாரில் இன்று அதிகாலை 4.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால்…

சிரியா மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதில் சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி பல ரொக்கெட்டுகள் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. காசா, லெபனான், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும்…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியை அதிகாரிகள் கொச்சியில் முறியடித்ததை அடுத்து சென்னையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியழக்கிழமை சென்னையின் 8 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு…

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வெள்ளியன்று ஒரு சக்திவாய்ந்த புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாகக் குறைந்தது இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புயல் காரணமாகக் குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களின் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளன….

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக…

ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியிலுள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்….

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Maurepas (Rennes) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இருவரே கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷ்யாவிலும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பாடசாலையில் ஒரு…

புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள்ள கெமல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் புனித பாப்பரசருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புனித பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் விரிவான விவரங்கள் எதையும் வத்திகான் வெளியிடவில்லை. எனினும், திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் வழமையாக வைத்தியசாலையில்…

இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்குக் குஜராத் – சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் வைத்து, ‘எல்லா திருடர்களும் மோடி என்ற குடும்பப்பெயரை கொண்டிருக்கிறார்கள்’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். ஊழல் மோசடி…

எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். வெலிங்டனில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் நேற்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். துருக்கி, சிரியா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன….

18 வயதுக்குட்பட்ட TikTok உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே TikTok கை பயன்படுத்த முடியும் அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று TikTok தெரிவித்துள்ளது. Source link

பிரபலமான பெயர்கள் மற்றும் விளையாட்டு அணிகள் விசேடமாக லிவர்பூல் அணி மிகவும் பலம் வாய்ந்த முன்னணி அணியாக 2022இல் அடையாளப்படுத்தப்பட்டது. அதன் கடவுச் சொல் தரமானது. ஆனால் இன்று பிரித்தானியாவில் நிகழ்நிலை கணக்குகளின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் அனைவரும் சிறந்த ‘கடவுச்சொல்‘ வைத்திருப்பதில்…

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2024ஆம் ஆண்டில் ஒழுங்கு செய்துள்ள 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பு 18 வருடங்களின் பின்னர்…

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை [SPDC] இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன. தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) கற்கைநெறிகளுக்கான நிதி…