- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

பசறை கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளியிருக்கும் முருகன் சிலைக்கு சூட்டப்பட்டிருந்த தங்கநகைகள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது. ஆலய பூசகரின் மகன் நேற்று (08) மாலை பூசை ஏற்பாடு செய்வதற்காக ஆலயத்திற்கு சென்றவேளையில் ஆலய கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக ஆலய பூசகரான…

தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற பதுளை மாணவி வர்ஷினி. – ரா.கவிஷான் – அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டி 2022ல் தேசிய மட்ட, பிரிவு 5 கட்டுரை இலக்கியம் நயத்தல் போட்டியில் ஊவா மாகாணபது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி…

மலையகத்தின் அன்புக்கரங்கள் அமைப்பின் 100 வது செயற்திட்டம் 05.11.2022 அன்று ஹாலி எல ப/ரொக்கத்தன்ன தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அப் பாடசாலையின் கல்வி…

படல்கும்பர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல கெடவில படல்கும்பர பகுதியில் வீடொன்றில் சட்ட விரோதமான முறையில் இரு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஆக்கரத்தனை விஷேட அதிரடி படையினரின் முகாமின் உயர் அதிகாரியின்…

பசறை மொனராகலை பிரதான வீதியில் கமேவெல 4 ம் கட்டை ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக மண் மேட்டுடன் பாரிய கற்பாறை ஒன்று வீதியில் வீழ்ந்தமயினால் வீதியில் வாகன போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்தாக இடம்பெறுகின்றது. எனவே வீதியில் பயணிக்கும்…

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவேக்கலை பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஸ்தானத்திற்கு விரைந்து சந்தேகத்துக்கிடமான இடத்தினை சுற்றிவளைத்த போது அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 32,48 வயதுடைய…

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதோடு பெரும்பாலான பயிர்ச்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை…

Missing red rubber stamp vector isolated லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேல்வத்தை தோட்ட பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவரை காணவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. லுணுகலை கேல்வத்தை ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்றைய தினம்…

நமுனுகுல – கனவரல்ல ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய காசோலை தோட்ட நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 26 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை தோட்ட முகாமையாளரின் ஊடாக…

நமுனுகுலை கனவரல்ல மௌசாகல்லை பகுதியில் அனர்த்த முகாமைத்துவத்தினரால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் கொடுகாத்தன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று மாலை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 4 பேரும் பெண்களில் 9 பேரும் ஆண்…

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெளித்தன்ன மாவத்தேகம ஹாலிஎல பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த 48 வயதுடைய பெண் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும்…

பசறை சுகாதார பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது. நேற்றைய தினம் கல்முனையில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பாவனைக்கு உதவாத 10 கிலோகிராம் அரிசி மூட்டைகள் 100 உம் , 25 கிலோ கிராம் அரிசி மூட்டைகள் 17 உம் ஏற்றிய லொறியை சோதனைக்கு உட்படுத்திய…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச் (Mariko Ouch) இடையிலான கலந்துரையாடல் சௌமிய பவனில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தொழிலாளர் நலன் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான உரிமைகள்…

பண்டாரவளை – எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (31.10.2022) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு,…

(க.கிஷாந்தன்) பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஹகல்ல அம்பரவ பகுதியில் நேற்று (31.10.2022) பெய்த கடும் மழையினால் மண்மேட்டுடன் கூடிய கொங்கிறிட் கட்டிடம் வீட்டின் மீது சரிந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதுடைய டபிள்யூ.எம். ஜெயசேகர…

இ.தொ.காவின் வேண்டுகோளுக்கு அமைய புதுச்சேரி அரசினால் இலங்கைவாழ் மக்களுக்கு நீரழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகள் மாண்புமிகு சபாநாயகர் திரு.செல்வம் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்களால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில்…