Vijay - Favicon

72 வயது முதியவரை கடித்து கொன்ற 40 முதலைகள்!


கம்போடியாவில் 72 வயது முதியவர் ஒருவரை 40 முதலைகள் சேர்ந்து கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லுவான் நாம் (Luan Nam) என்ற கம்போடியாவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் சியம் ரீப்பில்(Siem Reap) உள்ள அவரது முதலைப் பண்ணைக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளார்.


அங்கு முதலை ஒன்று முட்டை போட்டு இருப்பதை கவனித்த அவர், முட்டையை எடுப்பதற்காக தாய் முதலை அந்த பகுதியில் இருந்து விரட்டியுள்ளார், இதற்காக அவர் குச்சி ஒன்றை பயன்படுத்தியுள்ளார்.

சுற்றி வளைத்த முதலை

Cambodia crocodile farmer killed

அப்போது அந்த குச்சியுடன் முதியவரையும் சேர்த்து முதலை கீழே இழுத்து போட்டுள்ளது. இதில் நிலைதடுமாறிய அவர் மீண்டும் எழுவதற்குள் அங்கிருந்த 40 முதலைகள் அவரை சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளது.


இதனால் வலியால் துடித்த முதியவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் தலைமை காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில்,

சியம் ரீப் பகுதியை சுற்றி நிறைய முதலை பண்ணைகள் இருப்பதாகவும், முதலையின் தோல்கள், அவற்றின் முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக பல்வேறு மக்கள் இங்கு முதலை பண்ணை வளர்ப்பை தொழிலாக செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், “கடந்த 2019 ஆண்டு இதைப் போல் 2 வயது சிறுமி ஒருவர் அவர்களுடைய முதலைப் பண்ணைக்கு அருகில் சென்ற போது முதலைகள் சிறுமியை கடித்து குதறி கொன்றுள்ளது.” என தெரிவித்துள்ளர்



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *