Vijay - Favicon

40 பயணிகளுடன் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து..!


ஹொரணை – இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக இன்று (21) காலை தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.


சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த பயணிகள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வெளியே குதித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பேருந்து ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தவுடன் பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


அப்போது பேருந்தில் 40இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததோடு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

40 பயணிகளுடன் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து..! | Bus With 40 Passengers Caught Fire Suddenly



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *