Vijay - Favicon

நிவாரணங்கள் இல்லாத சிறிலங்கா வரவு – செலவுத்திட்டம்! எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்


இலங்கையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பரிந்துரையை அதிபர் முன்வைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் அதிபரால் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.



அநுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில்,

நிவாரணங்கள் இல்லாத சிறிலங்கா வரவு - செலவுத்திட்டம்! எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் | Budget 2023 Sri Lanka Government Comments


“வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதேனும் நிவாரணம் கிடைக்கப் பெறுமா என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.


அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு குறைந்தபட்சமேனும் நிவாரணம் வழங்கும் எவ்வித பரிந்துரைகளும் வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.


மாறாக வரி அதிகரிப்பை மாத்திரம் வரவு – செலவுத் திட்டம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.



2023 ஆம் ஆண்டு வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் ஒன்றரை ட்ரில்லியன் ரூபா அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.


வரி அதிகரிப்பு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். பொருளாதார ரீதியில் இருந்து நாட்டு மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


சஜித் பிரேமதாச

நிவாரணங்கள் இல்லாத சிறிலங்கா வரவு - செலவுத்திட்டம்! எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் | Budget 2023 Sri Lanka Government Comments



அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் வழங்கப்படவில்லை எனவும் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *