பிரித்தானியாவின் லிஸ் ட்ரஸ்சுக்குப் பதிலாக பிரதமராக பதவியேற்கும் போட்டியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில், பொறிஸ் ஜோன்சன் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இரண்டு தனித்தனி ஆதாரங்களை மேற்கோள்காட்டி பிரித்தானிய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள அதேவேளை, இந்தச் சந்திப்பில் என்னென்ன விடயங்கள் விவாதிக்கப்பட்டன என்ற தகவல்களை இரண்டு தரப்புமே வெளியிடவில்லை.
தலைமைத்துவதற்கான போட்டி
பிரித்தானியாவின் தலைமைத்துவதற்கான போட்டியில் ரஷி சுனக், தொடர்ந்தும் முன்னேற்றம் கண்டுவருகின்றார்.
ரிஷி சுனக் கடந்த பொறிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் உட்பட கட்சியின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் 128 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டினார்.
இதேவேளை உள்ளூர் ஊடகங்களின் கணிப்பின் பிராகாரம் பொறிஸ் ஜோன்சன், இதுவரை 53 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டியுள்ளார்.
பொறிஸ் ஜோன்சனின் ஆதரவு நிலை
எனினும் தலைமைத்துவத்திற்கான போட்டியில் இணைவதற்கு குறைந்தது 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிபந்தனை காணப்படுகின்றது.
தமக்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பொறிஸ் ஜோன்சன் கூறினாலும், அது குறித்து ரிஷி சுனக்கின் ஆதரவாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.