Vijay - Favicon

சுனக்கின் திட்டம் மனித உரிமைக்கு எதிரானது – ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்


இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புகலிடக் கோரிக்கையாளர்களை ஒடுக்கி வருகிறார்.


ஏறக்குறைய 46,000 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடந்த ஆண்டு ஆங்கிலக் கால்வாயின் குறுக்கே சிறிய படகுகளில் ஐக்கிய இராச்சியத்திற்கு வந்துள்ளதாக பிரித்தானிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


குறித்த வருகையானது இது முந்தைய ஆண்டை விட பெரிய அதிகரிப்பாக கருதப்படுகிறது.

சட்டவிரோதமானது

சுனக்கின் திட்டம் மனித உரிமைக்கு எதிரானது - ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் | British Asylum Seekers Rishi Sunak Tamil People




படகுகளின் வருகையை நிறுத்துவது பிரித்தானிய மக்களினுடைய முன்னுரிமை என்று பிரித்தானிய பிரதமர் சுனக் தெரிவித்திருந்தார்.


ஆனால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டும் இந்த திட்டத்தை சட்டவிரோதமானது என்று கூறியது.


இது போர் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிக்கும் மக்களை நடத்தும் ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என தெரிவித்துள்ளது.

புலம்பெயர் மக்களுக்கு சவால்

சுனக்கின் திட்டம் மனித உரிமைக்கு எதிரானது - ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் | British Asylum Seekers Rishi Sunak Tamil People

சுனக்கின் உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் கூட, இந்தத் திட்டம் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டுடன் ஒத்துப்போகவில்லை என்று ஒப்புக்கொண்டார்.



இதனால் புலம்பெயர் மக்களுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *