Vijay - Favicon

இத்தாலிக்கு செ்றவர்களின் படகு கவிழ்ந்தது பலர் உயிரிழப்பு


இத்தாலிக்கு சட்டவிரோதமாக சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்ததுடன் பலரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




துனிஸ், ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

எனவே அங்கிருந்து வாழ்வாதாரம் தேடி பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கின்றனர்.



அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்டவிரோத பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன.



இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

இந்த விபத்தில் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *