Vijay - Favicon

குளத்திலிருந்து வயோதிபப்பெண் சடலமாக மீட்பு- மண்டூர் கணேசபுரத்தில் சம்பவம்!


வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேசபுர பிரதேசத்தில் குளத்திலிருந்து வயோதிபப்பெண் ஒருவர் நேற்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணேசபுரம் மண்டூர் பிரதேசத்தைச் சேர்ந்த (98) வதுடைய (01) பிள்ளையின் தாயாரான வேலாச்சி கன்ணிப்பிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

தனது பேத்தியின் பராமரிப்பில் இருந்து வந்த குறித்த வயோதிபப்பெண் இதற்கு முன்னர் பல தடவை அருகில் உள்ள குளத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருந்த நிலையில் காப்பாற்றப்பட்டிருந்ததாகவும் சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்தவர் காணாமல் போய்யிருந்த நிலையில் அருகில் உள்ள குளத்துப்பகுதியில் உறவினர்கள் தேடிச்சென்றபோது நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்;ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

களுவாஞ்சிகுடி  நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர்  பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளித்தாதார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *