Vijay - Favicon

தடியால் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் !


குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின் தாயாவார்.

கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது, ​​யுவதி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

அரநாயக்க பொலிசார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தடி இறந்த பெண்ணுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையை செய்த சந்தேக நபரின் கணவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *