
ஆதிவாசிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடொன்று இடம்பெற வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோர் எத்தோ நேற்று (06) தெரிவித்தார்.
ஆதி வாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவை மகியங்கனைப் பகுதியின் தம்பானை என்ற வேடுவக் கிராமத்தில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“அனைத்து இனங்கள் பற்றியும் பாராளுமன்றத்தில் பேசப்படுகின்றது. ஆனால் எம்மை பற்றி எவரும் கதைப்பதில்லை. தோல்வியடைந்தவர்கள் கூட தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்து விடுகின்றனர்.
எனவே, எம்மவர்கள் பற்றி கதைப்பதற்கு எமக்கும் தேசியப்பட்டியல் ஊடாகவேனும் ஒரு வாய்ப்பு கட்டாயம் கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுத்தால் அது பயன்மிக்கதாக அமையும்” என தெரிவித்தார் .