
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 44 வயதுடைய சந்தேகநபர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.
இது தொடர்பில் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.