மட்டக்களப்பு வாகநேரி பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் அடங்கிய வெடிப்பொருட்கள் சிலவற்றினை நேற்று ( 9) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 இரும்பு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்க்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பொருட்டு வாழைச்சேனை பொலிசார் ஊடாக வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியினை நாடியுள்ளனர். குறித்த பிரதேசமானது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.