ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் ஜெர்மன் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஹோட்டலில் மசாஜ் செய்துகொள்ள வந்த 65 வயதான ஜெர்மன் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
45 வயதான சந்தேக நபர் மசாஜ் செய்யும் போது தனது இரகசிய பாகங்களை தொட்டார் என குறித்த பெண் முறைப்பாடளித்துள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரை இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.