Vijay - Favicon

அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு!


அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவான அந்நிய செலவாணியை சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

கல்வி, பயிற்சிகள், திறன் அபிவிருத்தி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற உத்தியோகபூர்வ பயணங்களின் அடிப்படையில் கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படக்கூடிய 750 அமெரிக்க டொலர் பொழுதுபோக்கு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *