Vijay - Favicon

விகாரைகள் , பொது இடங்களை இருட்டில் வைக்க முடியாது : சபாநாயகர் !


நாட்டில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அழுத்தங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி ஹபரகடவில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றில் உரையாற்றிய சபாநாயகர், இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், மகா சங்கத்தினரும் அரசாங்கமும் ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “விகாரைகள் உட்பட அனைவருக்கும் மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குடிநீர் கட்டணமும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நிறைய செலவாகிவிட்டது. மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணத்தை மிகக் கவனமாகச் செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால் இந்தக் காலத்தில் விகாரைகளில் அப்படிச் செய்ய முடியாது. விகாரைகள் பொது இடங்களை இருட்டில் வைக்க முடியாது. விகாரைகளுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் விகாரைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் மின்சார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாட ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார்” என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *