பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பால் வழங்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
தற்போது மீண்டும் மாணவர்களுக்கு பாராளுமன்றத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, பல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் சமீப நாட்களில் பாராளுமன்றத்தைக் காண வருகை தருகின்றனர்.
பாடசாலை மாணவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர விரும்பினால், அது தொடர்பில் அதிகாரிகள் எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.