மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
அதிகள் வரவேற்பு, தேசிய கொடியேற்றம் தேசிய கீதம், வலய கீதம் இறைவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளா சி. சிறிதரன், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் மற்றும் பொறியியலாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பாடசாலை மாணவர்களின் நடனங்களும் இடம் பெற்றது.