Vijay - Favicon

பட்டிருப்பு கல்வி வலய முறைசாரக் கல்விப் பிரிவினரால் போரதீவுப்பற்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு


(சித்தா)

பட்டிருப்பு கல்வி வலய முறைசாரக் கல்விப் பிரிவினரால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று (20.03.2023) மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய கலைமகள் அரங்கில் வைக்கப்படும் இடம்பெற்றது. 

போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.அருள்ராசா தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் – சிறிதரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். பட்டிருப்பு கல்வி வலய முறைசாரக் கல்விப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் றீற்றா – கலைச்செல்வன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம், களுதாவளை அனுசரணையில் போரதீவுப் பற்றுக் கோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 470 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *