Vijay - Favicon

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர் !


புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

அண்மையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கைக்கான மெக்சிக்கோ தூதுவர் Federico Salas Lotfe, இலங்கைக்கான பூட்டான் தூதுவர் Rinchen Kuentsyl, இலங்கைக்கான பரகுவே தூதுவர் Flemming Raul Duarte, இலங்கைக்கான லக்சம்பர்க் தூதுவர் Peggy Frantzen, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan, இலங்கைக்கான ஓமான் தூதுவர் Ahmed Ali Saeed Al Rashdi, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean- Francois Pactet மற்றும் இலங்கைக்கான கானாவின் உயர்ஸ்தானிகர் Kwaku Asomah Cheremeh ஆகியோரே இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *