Vijay - Favicon

ஜனநாயக விழுமியங்களும் மனித உரிமைகளும் : ஆசியா எதிர்கொள்ளும் சவால்கள்


ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் சவால்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற ஆசியாவின் எதிர்காலம் என்ற நிக்கேய் போராத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ஆசியா எதிர்கொள்ளும் இந்த மூன்று சவால்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறுபட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளின் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற வகையில் ஆசியாவின் முக்கியத்துவம் உலக சனத்தொகையில் 60வீதமான மக்கள் வாழ்வது உலக பொருளாதாரத்திற்கு ஆசியாவின் மிகப்பெரிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் மீட்சி இந்தியாவின் உள்நாட்டு கேள்வி போன்றவற்றையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து ‘நிக்கேய்’ மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு, கடுமையான வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு , ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *