Vijay - Favicon

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் – இலவசமாக கிடைக்கவுள்ள உரம்


2022/23 பெரும்போகத்தில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்ட நாட்டில் உள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கு சேற்று உரத்தை (TSP) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



2023 சிறு போகத்தில் நெற்செய்கை மேற்கொண்டாலும் இல்லாவிட்டாலும் உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவச உரம்

 விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - இலவசமாக கிடைக்கவுள்ள உரம் | Best Fertilizer For Rice Urea Tsp Free Fertilizer



விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய ஒரு ஹெக்டயருக்கு 55 கிலோக் கிராம் வீதம் இந்த உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.


3 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் விவசாயிகளுக்கு நெற்செய்கைக்குத் தேவையான சேற்று உரம் (TSP) ஏற்றிய MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நாட்டை வந்தடைந்த உரமேற்றிய கப்பல்


விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - இலவசமாக கிடைக்கவுள்ள உரம் | Best Fertilizer For Rice Urea Tsp Free Fertilizer


அந்தக் கப்பலில் 36,000 மெட்ரிக் டொன் TSP உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் இதேபோன்ற மேலுமொரு சேற்று உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.


ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த சேற்று உரம் (TSP) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *