பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரஸ்சல்சில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்ட இரண்டு காவல்துறையினரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரஸ்சல்சில் உள்ள வடக்கு தொடரூந்து நிலையம் அருகே இரண்டு காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் இரண்டு காவல்துறை அதிகாரிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த 2 அதிகாரிகளும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறைனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பின்னர் காயம் அடைந்த 2 அதிகாரிகள் மற்றும் மர்மநபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.