Vijay - Favicon

தமிழர் வரலாற்றின் மற்றுமொரு அவலம்! 32ஆவது நினைவு தினம் கடைப்பிடிப்பு (படங்கள்)


சவுக்கடி படுகொலை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 32 ஆவது ஆண்டை சவுக்கடி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை நினைவு கூர்ந்தனர்.


இன்றைய தினம் மாலை படுகொலை நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் மைலம்பாவெளி – விவேகானந்தபுரம் பங்குத் தந்தை அருட்திரு நிக்கலஸ் யூட் நினைவு திருப்பலியை ஒப்புப் கொடுத்து பிரார்த்தனை நடத்தினார்.



1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கொடூர கொலை



துப்பாக்கியால் சுட்டும், கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர், இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.


சவுக்கடி கிராமம் ஏறாவுர் முஸ்லிம் பிரதேசத்திற்கு அண்மித்த கிராமம் என்பதால், இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் முஸ்லிம்களும் தொடர்புபட்டிருப்பதாக தமிழர் தரப்பில் சந்தேகங்கள் உள்ளன.


1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியான மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாகவே இந்தச் சந்தேகம் இருந்தாலும் பொறுப்பானவர்கள் யார்? என்பதை தங்களால் உறுதிபடக் கூற முடியாது என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் இடம்பெற்று வருடங்கள் பல கடந்து விட்ட போதிலும், இதுவரை தங்களுக்கு கிடைக்காத நீதி தற்போதைய ஆட்சியிலாவது கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவிக்கின்றனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *