Vijay - Favicon

உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது – பந்துல குணவர்தன


உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.




நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது.




இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எந்தவித அரசியல் தலையீடும் இன்றி போக்குவரத்து கூட்டுதானத்திற்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலைமையை மாற்ற என்னால் முடிந்தது.



இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வருமானத்திற்கு அதிகமாகவே செலவு செய்துள்ளனர்.

எரிப்பொருள் மின்சாரம் என்பவற்றிலும் இந்த நிலைமை உள்ளது.

தவறான முடிவுகள்

உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது - பந்துல குணவர்தன | Bandula Handing Over Of New Buses Nuwara Eliya

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்றவற்றால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது.



கொவிட் தொற்றும் வந்தது.

அதே போன்று நாம் எடுத்த வரி சுதந்திரம் உள்ளிட்ட தவறான முடிவுகளும் இதற்கு காரணங்களாகும்.

முன்னாள் அரசாங்கம் எடுத்த கடனை அடுத்து வரும் அரசாங்கம் செலுத்த வேண்டும்.

உலகத்திற்கு முன் சண்டியளர்களாக செயற்பட முடியாது.

ஆகவே கடனை மீளச் செலுத்த பிரான்ஸ் நிறுவனத்தின் உதவியைக் கேட்டுள்ளோம்.




2025 ஆண்டாகும் போது போக்குவரத்துச் சபையின் பணத்தை வெளிச் செல்ல விடாது பாதுகாத்தால் அதனை உங்களுக்கு மீள வழங்குவேன் ”என்றார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *